தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

பயனற்ற எரிவாயு மயானம்

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பேச்சிப்பாறை அருகே பழைய சுடுகாட்டை சீரமைத்து புதிதாக எரிவாயு மயானம் அமைக்கப்பட்டது. இந்த எரிவாயு மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை எரிப்பதற்காக கொண்டுவந்து எரித்து சென்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மயானத்தில் இருந்த எந்திரம் பழுதடைந்தது. தொடர்ந்து அந்த பழுது சரிசெய்யப்பட்டும் மீண்டும் இந்த மயானம் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அப்படியே உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பேச்சிப்பாறை.

பயனற்ற கழிவறை

கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் அவர்களுக்கு என அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிவறை அவர்களுக்கு தெரியாத வகையில் கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வரும் பொதுமக்களுக்கு கழிவறை எங்கு இருக்கிறது என தெரியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தெரியும் வகையில் கழிவறை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.

புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், அரசு காலனி அருகில் உள்ள அம்பானி நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டுது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய தார் சாலை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சண்முகசுந்தரம், அம்பானி நகர்.


Next Story