தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

போக்குவரத்திற்கு இடையூறு

திருச்சி பாரதியார் சாலையில் இருந்து பேர்ட்ஸ் ரோடு செல்லும் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்துவதினால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையின் அருகே பள்ளிகள் உள்ளதால் மாணவ-மாணவிகளுக்கும் பெரிதும் இடையூறாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பேர்ட்ஸ் ரோடு.

பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள சிந்தாமணி வெனீஸ் தெருக்களில் பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவடையாமல் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சத்திரம் பஸ் நிலையம்

சாலையில் திரியும் குதிரைகள்

திருச்சி-திண்டுக்கல் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி,

கொசு மருந்து அடிக்கப்படுமா?

திருச்சி மாநகராட்சி சவேரியார் கோவில் தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி இப்பகுதியில் கொசு தொல்லை அதிகளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாருவதுடன் மாலை நேரத்தில் கொசு மருந்துகள் அடித்து இப்பகுதியில் நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சவேரியார் கோவில் தெரு.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாநகராட்சி செல்வநகர் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி வாகனங்கள் பழுதடைந்து விடுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.


Next Story