தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

அரசு டவுன் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில் 4 வழிச்சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேம்பாலம் சாலை பணி முடிந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சென்னை மற்றும் கும்பகோணம் செல்லும் அரசு பஸ்கள் மேம்பாலம் சாலையின் வழியாக செல்கிறது. இதேபோல் ஜெயங்கொண்டம்-கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் செல்லும் அரசு டவுன் பஸ்கள் நெல்லித்தோப்பு பஸ் நிறுத்தத்தில் செல்லாமல், மேம்பாலத்தின் வழியாக செல்வதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லுபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக நெல்லித்தோப்பு கிராமத்தில் அரசு டவுன் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

அரியலூர் மாவட்டம், சாத்தனப்பட்டு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது இதன் தூண்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சர்வீஸ் சாலை அமைக்கப்படுமா?

அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் பள்ளம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை திருப்பத்தில் சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரிசெய்ய பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, பணி முடிந்ததும் அதில் மண்ணை கொட்டி தார் சாலை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் சரிசெய்யப்பட்டு 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் தார் சாலை உள்வாங்கி பெரிய பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயனற்ற பொதுக்கிணறு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், விளந்தை தெற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகைகள் இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுக்கிணறு அமைக்கப்பட்டது. தற்போது இந்த கிணற்றை சுற்றி மரக்கிளைகள் போடப்பட்டுள்ளதாலும், ஆக்கிரமிப்பாலும், கிணறு பராமரிக்கப்படாமல் உள்ளதாலும் தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயனற்றுள்ள இந்த கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


Next Story