பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
x
தினத்தந்தி 22 Sept 2022 1:15 AM IST (Updated: 22 Sept 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

புகாா் பெட்டி

ஈரோடு

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

கோபி வாசு லே அவுட் மனை பிரிவில் 4-வது வார்டில் நகராட்சி பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் முட்செடிகள், கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. பூங்காவில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வெட்டப்பட்டன. ஆனால் அவைகள் முழுமையாக அகற்றப்படவில்லை. பாதி மட்டுமே அகற்றப்பட்டு உள்ளது. எனவே அகற்றப்படாமல் உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தமாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

குப்பை தொட்டி தேவை

கோபி அருகே உள்ள கொடிவேரியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் குப்பைகள் ஆங்காங்கே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அதன் வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே குப்பையை கொட்ட மேம்பாலம் பகுதியில் குப்பை தொட்டி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயசேகர், கலிங்கியம்.

குழியை மூடவேண்டும்

மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாள்பாளையம் பகுதியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. பராமரிப்பு பணி முடிந்த பின்னர் அந்த குழிைய மூடாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு குழி இருப்பது தெரியவில்லை. எனவே விபத்து ஏற்பட்டு ஏதேனும் உயிர்ப்பலி ஏற்படும் முன் குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மொடக்குறிச்சி.

ஆபத்தான குடிநீ்ர் தொட்டி

ஈரோடு சூளை எல்.வி.ஆர். காலனியில் ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து கிடக்கிறது. இதனால் இந்த தொட்டி அருகே செல்ல பொதுமக்கள் பயப்படுகிறார்கள். எனவே ஆபத்தான இந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தேவா, ஈரோடு.

புதர்கள் அகற்றப்படுமா?

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அந்த இடம் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் வாழும் கூடாரமாக மாறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

பாராட்டு

ஈரோடு வாய்க்கால் மேடு பாப்பன்காடு முதல் வீதியில் உள்ள கால்வாயில் இருந்து குப்பைகள் தூர்வாரப்பட்டது. ஆனால் தூர்வாரப்பட்ட அந்த குப்பைகள் வெளியே குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அவைகள் அப்புறப்படுத்தப்படாமல் இருந்தது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பாப்பன்காடு

-----------------


Next Story