தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகனஓட்டிகளுக்கு இடையூறு
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலுக்கு உட்பட்ட கிராமப்புற பகுதியில் சில இடங்களில் குப்பைகளை சிலர் சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசோக், காளையார்கோவில்.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் சமீபகாலமாக நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கடியால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ்குமார், கல்லல்.
பொதுமக்கள் அச்சம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் சிலர் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் வாகனஓட்டிகள், நடைபாதையினர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் பொதுமக்கள் சாலையை கடக்க அச்சம் அடைகின்றனர். எனவே வாகனஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்முருகன், தேவகோட்டை.
கண்மாய் தூர்வாரப்படுமா?
சிவகங்கை மாவட்டம் கண்ணனேந்தல் கண்மாயை தூர்வார வேண்டும். இதன் மூலம் கண்மாயில் தண்ணீரை தேக்கி விவசாயம், அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்மாயை தூர்வார நடடிக்கை எடுக்க வேண்டும்.
ராமையா, சிவகங்கை.
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கலிப்புலி கிராமம் கல்லுவயல் தெருவில் மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்வயர்கள் தாழ்வாக செல்வதால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூமணி, கலிப்புலி.