தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

பொதுமக்கள் அச்சம்

சிவகங்கை மாவட்டம் புதுக்கண்டனூர் கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் சாலையில் செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகின்றன. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து செல்கின்றது. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

கண்ணன், புதுக்கண்டனூர்.

நடவடிக்கை எடுப்பார்களா?

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக சாலையோரங்களில் காணப்படும் கருவேலமரங்களால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கருவேலமரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

சிவகுமார், தேவகோட்டை.

சாய்வான மின்கம்பம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் அரசு பள்ளி மற்றும் ரேஷன் கடைக்கு இடைபட்ட பகுதியின் அருகில் 7-ம் நம்பர் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் நேரிட வாய்ப்பு உள்ளது. மக்களின் நலன்கருதி இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

கார்த்திகேயன், வைகைவடகரை.

ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டி-பொன்னமராவதி வரை செல்லும் நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலையோரத்தில் உள்ள கடை மற்றும் வீட்டு உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து வருகின்றனர். தங்களுடைய வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்து. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மாதவன், எஸ்.புதூர்.

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் கல்லல் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறுவர்கள், பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் சிறு, சிறு காயம் அடைகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

முரளி, கல்லல்.


Next Story