தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

பஸ் வசதி

சிவகங்கை மாவட்டம் பாகனேரி மற்றும் கல்லல் சுற்றுப்புற பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ள மாணவர்கள், வேலைக்கு செல்வோருக்கு முறையான பஸ் வசதி இல்லை. எனவே இப்பகுதிகளுக்கு இடையே பஸ் வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? குமரன், பாகனேரி.

செய்தி எதிரொலி

பிளாமிச்சம்பட்டி கண்மாயில் பழுதடைந்த மடைகளை சீரமைக்க வேண்டி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் பயனாக தற்போது மடைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர். ரவீந்திரன், பிளாமிச்சம்பட்டி,

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேவகோட்டைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி இல்லை. தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே வாருகால் அமைக்க நடவடிக்கை தேவை. மூர்த்தி, தேவகோட்டை,

நாய் தொல்லை

மானாமதுரை பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும். கண்ணன், மானாமதுரை.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் கல்லலில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே இப்பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காளிமுத்து, கல்லல்.


Next Story