தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

குவிந்து கிடக்கும் குப்பை

மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் சாலை ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் தேங்காமல் அவ்வப்போது அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகர், மதுரை.

தெருநாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் விளாங்குடி ஐ.ஓ.சி. நகர் பகுதியில் அளவுக்கு அதிகமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விளாங்குடி.

சேதமடைந்த மின்கம்பம்

மதுரை மாநகராட்சி பெத்தானியாபுரம் பூ மாலைக்கடை அருகில், குரு தியேட்டர் எதிர்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரின் மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், பெத்தானியாபுரம்.

சுகாதார சீர்கேடு

மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் அன்புநகர் முல்லை வீதியில் பாதாள சாக்கடை நீர் மூடி வழியாக கடந்த 15 நாட்களாக தொடர்ந்து பொங்கி வெளியேறிக்கொண்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொசு தொல்லையும் அதிக அளவில் உள்ளது. எனவே அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா உறங்கான்பட்டி, கொட்டாணிபட்டி, அழகிச்சிபட்டி ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாதினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்க சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதுடன், வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இளங்கோ, உ.அழகிச்சிபட்டி.


Next Story