தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

மேம்பாலப்பணி நிறைவடையுமா?

ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகில் உள்ள திருப்புல்லாணி செல்லும் பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால வேலை கடந்த 5வருடங்களாக இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இ.சி.ஆர். ரோடு வழியாக சுற்றி செல்லவேண்டி உள்ளது. இதனால் மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

வாகனஓட்டிகள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் வாலிநோக்கம் விலக்கு கிழகிடாரம் முக்கு ரோட்டில் மின்கம்பத்தில் உள்ள கேபிள் வயர்கள் சாலையில் ஆங்காங்கே தொங்கியவாறு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே ஆபத்தான முறையில் தொங்கும் கேபிள் வயர்கள் சம்பந்தப்பட்டவர்கள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முனியசாமி, வாலிநோக்கம்.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் சேரந்தை, தனிச்சியம், சேனாங்குறிச்சி, டி.கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் உப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பயணிக்கும் முக்கந்தர் பஸ் ஸ்டாப்பில் இருந்து டி.கிருஷ்ணாபுரம் வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சண்முகவேல், கடலாடி.

கூடுதலாக டாக்டர்களை நியமிக்க கோரிக்கை

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே கூடுதல் டாக்டர்களை நியமித்து நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

முகம்மது தமீம், ராமநாதபுரம்.

வறட்சி நிவாரணம் கிடைக்குமா?

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் கீழக்கிடாரம், காவாகுளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 2022- 2023-ம் ஆண்டுக்கான அரசு அறிவித்த வறட்சி நிவாரணம் இதுவரை வழங்கப்படாததால் இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் வேளாண்மை துறையினர் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

முனியசாமி, காவாகுளம்,


Related Tags :
Next Story