தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

தெருவிளக்கு வசதி தேவை

மதுரை மாநகராட்சி 8-வது வார்டு மீனாட்சியம்மன் நகர் தெற்கு 11-வது தெரு 4-வது குறுக்குத்தெருவில் உள்ள மின்கம்பத்தில் தெரு விளக்கு அமைக்கப்படவில்லை. 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இங்கு தெருவிளக்கு வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலு, சூரியாநகர், மதுரை.

போக்குவரத்துக்கு இடையூறு

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கருங்காலக்குடி புதிய மேம்பாலத்தின் கீழே ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளன. எனவே அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

ஜெயராம், மேலூர்.

கால்நடைகள் தொல்லை

மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோவில் தெருவில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பழங்காநத்தம்.

சாலையின் நடுவில் மின்கம்பம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டவுன் 19-வது வார்டில் கவணம்பட்டி ரோட்டில் இருந்து பால்சாமி நாடார் தெரு நுழைவு வாயிலின் நடுவில் மின்கம்பம் உள்ளது. தெருவுக்கு உள்ளே வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. தெருவில் மின்கம்பங்களில் உள்ள வயர்கள் வாகனங்களில் தட்டும் அளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், உசிலம்பட்டி.

வேகத்தடை அமைக்கப்படுமா?

மதுரை செட்டிக்குளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு உயர் நிலைப்பள்ளி இருபுறமும் வாகனங்கள் அசுரவேகத்தில் செல்கின்றன. இதனால் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் நலன் கருதி பள்ளிகளின் இருபுறமும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

பத்மாவதி, செட்டிக்குளம்.


Next Story