தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 5 Oct 2023 12:30 AM IST (Updated: 5 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

குண்டும் குழியுமான சாலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பல வார்டுகளில் குடிநீர் குழாய்க்காக சாலையில் குழி தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட குழிகளால் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். குமார், சாத்தூர்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசிக்கு இரவு நேரங்களில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றது. இதனால் இங்கிருந்து பயணிக்கும் பயணிகள் காத்திருந்து பயணிப்பதால் சிரமம் அடைகின்றனர். எனவே இப்பகுதியில் இரவு வேளையில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கனகராஜ், ராஜபாளையம்.

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் தனியார் பள்ளியின் எதிரே அமைந்துள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். வேல்ராஜன், திருத்தங்கல்.

புதிய குடிநீர்தொட்டி வேண்டும்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மானூர் ஊராட்சி குருவியேந்தல் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தி புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா? சிங்கராஜ், நரிக்குடி.

எரியாத தெருவிளக்கு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பழையபஸ் நிலையம் முன்புறம் மற்றும் எதிரேயுள்ள தெருகளில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் பஸ் நிலையம் வரும் பெண்கள், குழந்தைகள் அச்சம் அடைகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா. க. ராசபாண்டி, அருப்புக்கோட்டை.

1 More update

Next Story