தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கொசுக்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராஜபாளையம்.
தேங்கி கிடக்கும் குப்பை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு அவ்வப்போது அகற்ற வேண்டும்.
ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர்.
பஸ்வசதி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழிக்கு குறிப்பிட்ட அளவு தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அருப்புக்கோட்டை.
வாகன ஓட்டிகள் அவதி
விருதுநகர் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகவே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதுடன் சிறு குழந்தைகளும் பெண்களும் சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜான், ஆலங்குளம்.
போக்குவரத்து நெரிசல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பஸ் நிலையம் அருகில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் இடையூறாக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிவேல், சாத்தூா்.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் பெத்தனாட்சி நகரில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் தேங்கிய குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயசந்திரன், பெத்தனாட்சி நகர்.
சேதமடைந்த சுற்றுச்சுவர்
விருதுநகர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள மயானம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மயானத்தின் சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் விழும் நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே அதனை முறையாக சீரமைப்பதுடன் சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், விருதுநகர்.
வீணாகும் குடிநீர்
விருதுநகர் மாவட்டம் வெற்றிலையூரணி பஞ்சாயத்து ஒண்டிவீரன் காலனியில் அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சிலநாட்களாக இந்த தொட்டியானது சேதமடைந்து நீரானது அதில் இருந்து வீணாக வெளியேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தொட்டியை மாற்றி புதிய தொட்டி அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், வெற்றிலையூரணி.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியிலிருந்து சிவகாசிக்கு செல்வதற்கு போதிய அளவு பஸ்கள் இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்பவர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
ஜோதிமணி, ெவம்பக்கோட்டை