தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதி 33-வது வார்டு மானகிரி மந்தையம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நின்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜேந்திரபிரகாஷ், மதுரை.

நோயாளிகள் அவதி

மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான இருக்கைகள் இல்லை. இதனால் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும். கர்ப்பிணிகளும் வெளியே மரத்தடியில் அமரும் நிலை உள்ளது. எனவே இங்கு இருக்கைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாண்டித்துரை, மேலூர்.

டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வருமா?

மதுரை மாவட்டம் செக்கானூரணி- திருமங்கலம் ரோட்டில் புதிதாக டிரான்பார்மர் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் குறைந்த மின்னழுத்த பிரச்சனை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரகுபதி, செக்கானூரணி.

சேதமடைந்த சாலை

மதுரை திருமலைநாயக்கர் மகாலை சுற்றியுள்ள பகுதி, மஞ்சணக்கார தெரு, பந்தடி ஏரியாக்கள், தெற்கு வாசல் பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக குண்டு குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை திருப்பரங்குன்றம் வடபழஞ்சி பகுதியில் வீட்டின் முன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சிறுவர்கள் அதிகம் இருப்பதால் நோய் பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமலி, வடபழஞ்சி.


Next Story