தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

தாழ்வாக செல்லும் மின்கம்பி

மதுரை மாநகர் தனக்கன்குளம் எம்.ஜி.ஆர். நகரில் மின்சார கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஞ்சித், மதுரை.

தெருநாய்கள் தொல்லை

மதுரை மாநகர் பெரியார் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே, தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறன், மதுரை.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதி 33-வது வார்டு மானகிரி மந்தையம்மன் கோவில் தெருவில் சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜேந்திரபிரசாத், மானகிரி.

தெருவிளக்குகள் தேவை

மதுரை வைகை தென்கரை ரோட்டில் ஓபுளாபடித்துறையிலிருந்து, குருவிக்காரன் சாலை பாலம் வரை தெருவிளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதி இருளாக உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஓபுளாபடித்துறையிலிருந்து குருவிக்காரன் சாலை பாலம் வரை உள்ள ரோட்டில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

அன்புமணி, மதுரை.

தடுப்பு சுவர் வேண்டும்

மதுரை மாநகர் அழகர்கோவில் சாலை முதல் அய்யர்பங்களா செல்லும் சாலையின் வடக்குபுறம் பொியாா் வாய்க்கால் கரையில் சில இடங்களில் தடுப்பு சுவர் இல்லை. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி இப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.


Next Story