தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

மாசு கலந்த குடிநீர்

மதுரை கீழமாசி வீதி வெங்கலகடைத்தெரு பகுதியில் சில சமயங்களில் வினியோகிக்கப்படும் குடிநீர் மாசு கலந்து வருகிறது. இந்த குடிநீரை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீருடன் மாசு கலந்து வினியோகிக்கப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலா, மதுரை.

பயணிகளுக்கு இடையூறு

மதுரை நெல்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சிலர் கடைகள் அமைத்துள்ளனர். இதனால் நிற்பதற்கு போதிய இடமின்றி பயணிகள் அவதி அடைகிறார்கள். எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரத்தினகுமார், நெல்பேட்டை.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

மதுரை தவிட்டுசந்தை பகுதி பால்மாடு குறுக்கு தெரு பந்தடி 8-வது தெருவில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சாலையில் வாகனஓட்டிகள் பயணிக்க, நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், மதுரை.

கலையரங்க கட்டிடம் வேண்டும்

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி செல்லூர் 60 அடி ரோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கோவில்களில் திருவிழா சமயங்களில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடத்த கலையரங்க கட்டிட வசதி இல்லை. இதனால் கோவிலுக்கு வருபவர்கள் நிகழ்ச்சிகளை காணமுடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கலையரங்கம் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், மதுரை.

சாலையில் கொட்டப்படும் கழிவுகள்

திருப்பரங்குன்றம் எஸ்.மேட்டுத்தெரு பகுதியில் கழிவுநீர் சாக்கடையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சாலையில் அப்படியே கொட்டி செல்கின்றனர். இதனால் சாக்கடை கழிவுகள் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமித்து கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.


Next Story