தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வாகனங்களை துரத்துவதால் வாகனஓட்டிகள் விபத்துக்களில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளிமுத்து, அருப்புக்கோட்ைட.

கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக திறந்தவெளியில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

குமரவேல், தாயில்பட்டி.

குண்டும், குழியுமான சாலை

விருதுநகர் பெத்தனாட்சி நகரில் முல்லை தெரு பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ெஜயச்சந்திரன், விருதுநகர்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் சில இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், சாத்தூர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் சுந்தரபாண்டியம் வடக்கில் உள்ள செங்குளம் கண்மாயில் கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் விவசாயப்பணிகளுக்கு போதிய அளவு நீரை சேமிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், வத்திராயிருப்பு.


Next Story