தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுற்றுச்சுவர் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் மாரனேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் அங்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குமார், மாரனேரி.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் ஒத்தையால்-சாத்தூர் சாலையில் உள்ள கண்மாய் அருகே சிலர் திறந்த வெளியில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருசாமி, சாத்தூர்.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் சாலையில் வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வெள்ளைச்சாமி, ராஜபாளையம்.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி, சாத்தூர் போன்ற பகுதிகளில் சிலர் அனுமதியின்றி வீடுகள் மற்றும் மரத்தடியில் வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் வெடி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
மாடசாமி, சாத்தூர்.
சாலையில் தேங்கும் மழைநீர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி-விருதுநகர் சாலை மத்தியசேனை பகுதியில் போதிய வாருகால் வசதி இல்லை. இதனால் சிறிய மழை பெய்தால் கூட மழை நீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்குகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.