'தினத்தந்தி' செய்தி எதிரொலி: குன்றில்கடவில் புதிய பாலம் அமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி காரணமாக குன்றில்கடவில் புதிய பாலம் அமைக்கப்பட்டது.
பந்தலூர்
'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக குன்றில்கடவில் புதிய பாலம் அமைக்கப்பட்டது.
தற்காலிக பாலம்
பந்தலூர் தாலுகா பொன்னானி அருகே குன்றில்கடவு பகுதியில் ஏராளமானபொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பொன்னானி பெரியபாலம் அருகிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரை சிமெண்டு சாலை செல்கிறது. இந்த சாலைமுடியும் இடத்திலிருந்து பெரிய நீரோடை வரை சாலை சேறும் -சகதியுமாக காணப்படுகிறது மேலும் நீரோடையின் நடுவே பொதுமக்கள் நடந்து செல்ல பாலம் இல்லாததால் தற்காலிகமாக மூங்கில் பாலம் அமைத்து நடந்து சென்றனர்.
இதனால் பொதுமக்களும் மாணவ- மாணவிகளும் அச்சத்துடன் கடக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் சில சமயங்களில் தற்காலிக பாலத்தில் இருந்து தடுமாறி நீரோடையில் விழும் நிலை இருந்தது.
புதிதாக அமைப்பு
இதேபோல் அவசர தேவைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். மழைக் காலங்களில் மூங்கில் பாலத்தை மழைவெள்ளம் அடித்து சென்றுவிடும் நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிமெண்டு பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுபற்றிய செய்தி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்டகலெக்டர் அம்ரித் உத்தரவின் படி நெல்லியாளம் நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குன்றில்கடவு செல்லும் சாலையின் நடுவே உள்ள நீரோடையின் நடுவே பாலம் கட்டப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் தார் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்ைக விடுத்து உள்ளார்கள்.