'தினத்தந்தி' செய்தி எதிரொலி: மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மின்மாற்றி மாற்றியமைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி: மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மின்மாற்றி மாற்றியமைப்பு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மின்மாற்றி மாற்றியமைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை அருகே உள்ள ராஜாபகதூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் மின்மாற்றி பழுதடைந்த நிலையிலும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆபத்தாகவும் இருந்து வந்தது. இது குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதன் எதிரொலியாக ஆதனக்கோட்டை உதவி மின் பொறியாளர் மோகனசுந்தரம் தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள் பள்ளி வளாகத்தில் பழுதடைந்திருந்த மின்மாற்றியை மாற்றி பள்ளி மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் 50 மீட்டர் தொலைவில் புதிய மின்மாற்றியில் பொருத்தினர். இதையடுத்து, மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மின்மாற்றியை அகற்றிய மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story