திண்டுக்கல் அஷ்டலட்சுமி கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்


திண்டுக்கல் அஷ்டலட்சுமி கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x

திண்டுக்கல் அஷ்டலட்சுமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் குடகனாறு இல்லம் எதிரே 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அஷ்டலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6.30 மணி அளவில் மங்கள இசை, 4-ம் கால யாகசாலை பூஜை, வேதிகார்ச்சனை, விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், தனபூஜை ஆகியவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், புனிதநீர் கலசங்கள் யாகசாலையை வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் கோவில் கோபுர கலசங்கள் மீது வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலஸ்தான மூர்த்திகள் மீதும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இந்த விழாவில் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, வார்டு கவுன்சிலர்கள் ஜோதிபாசு, காயத்ரி, தி.மு.க. மாநகர பொருளாளர் சரவணன், சபரி இந்திரகோபால், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் ரவிச்சந்திரன், ராமையா, செயலாளர் தில்லை நடராஜன், பொருளாளர் மாரிமுத்து, வழக்கறிஞர் குப்புசாமி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story