திண்டுக்கல் ஒன்றிய குழு கூட்டம்


திண்டுக்கல் ஒன்றிய குழு கூட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:30 AM IST (Updated: 26 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் சோபியாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.கிருஷ்ணன், ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு:-

முத்து (தி.மு.க.): பொன்னகரம், அடியனூத்து பகுதியில் தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

கனி (அ.தி.மு.க.) : அரசு ஒதுக்கும் நிதி மற்றும் பணிகளை பாரபட்சமின்றி அனைத்து ஊராட்சிகளுக்கும் பிரித்து வழங்க வேண்டும்.

ஜீவநந்தினி (இ.கம்யூ) : பூதமரத்துப்பட்டி, பிஸ்மி நகர் பகுதிகளுக்கு ஆத்தூர் திட்ட குடிநீர் வழங்க வேண்டும். மேலும் தோமையார்புரம் பகுதியில் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வநாயகம் (மா.கம்யூ) : அலக்குவார்பட்டி ஏ.டி காலனி பகுதியில் குடிநீர் வசதியும், மகாராஜ் நகர் பகுதியில் சாக்கடை வசதியும் செய்து தர வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. இதற்கு ஒன்றிய தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இனி வரும் காலங்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் இந்த கூட்டத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஊராட்சியின் சேமிப்பு நிதியில் இருந்து ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டிட பணிகள், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்பட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story