வ.உ.சி. பூங்காவில் புதுப்பொலிவுக்கு மாறும் டைனோசர்கள்...


வ.உ.சி. பூங்காவில் புதுப்பொலிவுக்கு மாறும் டைனோசர்கள்...
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை வ.உ.சி.பூங்காவில் பராமரிப்பின்றி இருந்த டைனோசர் சிலைகள் புதுப்பொலிவுக்கு மாறுகின்றன.

கோயம்புத்தூர்

கோவை வ.உ.சி.பூங்காவில் பராமரிப்பின்றி இருந்த டைனோசர் சிலைகள் புதுப்பொலிவுக்கு மாறுகின்றன.

டைனோசர் பூங்கா

கோவை மாநகரின் மையப்பகுதியில் வ.உ.சி. பூங்கா உள்ளது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவின் ஒரு அங்கமாக டைனோசர் பூங்கா விளங்கியது.

இங்கு பலவித டைனோசர்களின் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் அவை ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இது தவிர பழங்கால பொருட்கள் அடங்கிய கண்காட்சி அறையும் இடம் பெற்றிருந்தது.

ஆரம்பத்தில் இந்த பூங்கா, சிறுவர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் குடும்பத்துடன் வந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நாளடைவில் டைனோசர் பூங்கா பராமரிப்பின்றி விடப்பட்டது. தொடர்ந்து மூடப்படும் நிலைக்கு சென்றது.

இடமாற்றம்

இந்த நிலையில் டைனோசர் பூங்காவில் பராமரிப்பின்றி கிடக்கும் டைனோசர் சிலைகளை, அருகில் உள்ள வ.உ.சி. பூங்காவின் மற்றொரு பகுதிக்கு மாற்றி பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் புதுப்பொலிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி டைனோசர் பூங்காவில் இருந்த 4 ராட்சத சிலைகள் கிரேன் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த பணியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

இடம் மாற்றம் செய்யப்படும் டைனோசர் சிலைகளை சுற்றி ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. மேலும் வர்ணம் பூசி சிலைகள் பொலிவுபடுத்தப்படும். அதை சுற்றி மலைக்குன்றுகள் அமைக்கப்படும். இது தவிர டைனோசர் பூங்காவில் உள்ள கண்காட்சி அறையையும், மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்ைக எடுக்கப்படுகிறது. இது தவிர பொழுதுபோக்கு பூங்காவில் பொலிவிழந்து கிடக்கும் செயற்கை நீரூற்றை புதுப்பிக்கும் பணி விரைவில் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story