டிப்ளமோ என்ஜினீயர் சாவு
டிப்ளமோ என்ஜினீயர் சாவு
திருக்குவளை அருகே சாலையோர கருங்கல் மீது மோட்டார்சைக்கிள் மோதி டிப்ளமோ என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
டிப்ளமோ என்ஜினீயர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கச்சனம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் விக்னேஷ் (வயது21). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச்சேர்ந்த அவரது நண்பரான குணாளன் மகன் முத்துகுமரனுடன் விக்னேஷ் வேளாங்கண்ணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை முத்துகுமரன் ஓட்டினார்.
சாவு
அப்போது வாழக்கரை தூண்டிகாரன் கோவில் அருகே வந்தபோது, நிலை தடுமாறி அருகில் இருந்த சாலையோர கருங்கல் மீது மோட்டாார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார்சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த விக்னேசுக்கு பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர கருங்கல் மீது மோட்டார்சைக்கிள் மோதி டிப்ளமோ என்ஜினீயர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.