பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி பயில நேரடி சேர்க்கை முகாம்
பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி பயில நேரடி சேர்க்கை முகாம் தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் துணை தேர்வு எழுதாத மாணவர்கள் உயர் கல்வி, ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் படிப்பில் சேர்தலுக்கான சேர்க்கை முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள் அல்லது தலைமையாசிரியர்களால் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் முகாமிற்கு வரவழைக்கப்பட்டு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரடி சேர்க்கை செய்யப்பட்டது. நேற்று நடந்த முகாமில் வாலிகண்டபுரம், கீழப்புலியூர், எளம்பலூர், சிறுவாச்சூர், பூலாம்பட்டி, பாடாலூர், ஈச்சம்பட்டி, கூத்தூர் ஆகிய பள்ளியில் பயின்ற 11 மாணவர்கள் ஐ.டி.ஐ.யில் பிட்டர், எலக்ட்ரீசியன் போன்ற படிப்புகளில் நேரடி சேர்க்கை செய்யப்பட்டது. முகாமில் அந்த மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவுரைகள் வழங்கி சேர்க்கை சான்றிதழ் வழங்கினர். இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முகாமில் அனைத்து பள்ளிகளில் இருந்தும் துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரும் பள்ளி ஆசிரியர் மற்றும் பெற்றோருடன் வந்து உயர் கல்வி பயில நேரடி சேர்க்கை பெறலாம். இதில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு படிப்புகள் சார்ந்த வழிகாட்டலை வழங்கினர்.