அரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி சேர்க்கை கால அவகாசம் 31-ந்தேதி வரை நீட்டிப்பு


அரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி சேர்க்கை கால அவகாசம் 31-ந்தேதி வரை நீட்டிப்பு
x

அரியலூர் மாவட்ட்ததில் உள்ள அரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி சேர்க்கை கால அவகாசம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஆண்டிமடம் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) 2023-ம் ஆண்டிற்கு சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.

ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வி தகுதி 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆகும்.

கால அவகாசம் நீட்டிப்பு

சேர்க்கை கட்டணமாக ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சிக்கு ரூ.185-ம், 2 ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சிக்கு ரூ.195 ஆகும். சேர்க்கையின் போது 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவைகளை எடுத்து வர வேண்டும். இணையதளம் வாயிலாக www.Skilltraining.tn.gov அரசு ஐ.டி.ஐ.க்களிலேயே நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான கால அவகாசம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.க்களை அரியலூரை prlgitiariyalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9499055877 என்ற செல்போன் எண்ணிலும், 04329-228408 என்ற தொலைபேசி எண்ணிலும், ஆண்டிமடத்தை prlgitiandimadam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9499055879 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story