வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான நேரடி நியமனத்தேர்வு
மயிலாடுதுறையில், இன்று வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான நேரடி நியமனத்தேர்வு நடக்கிறது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில், இன்று வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான நேரடி நியமனத்தேர்வு நடக்கிறது.
தேர்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2023- ம் ஆண்டுக்கான வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான நேரடி நியமனத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படும் இந்த தேர்வில் 248 தேர்வர்களும், மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 260 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையத்துக்கு வருகை புரியும் தேர்வர்கள் சரியாக காலை 8.30 மணிக்கு வர வேண்டும்.
காலை 8.30 மணி
தேர்வர்களை சோதனையிடும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கும். 9.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.தேர்வர்கள் தங்களுடைய தேர்வு மைய நுழைவுச்சீட்டை தகுதியான புகைப்பட அடையாள அட்டை மற்றும் 2 கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே தேர்வறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.