சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இயக்குனர் அறிவுறுத்தல்


சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இயக்குனர் அறிவுறுத்தல்
x

சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இயக்குனர் அறிவுறுத்தினார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான டாக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 167 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் வழங்கினார். மேலும் அவர் அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் உதவித்தொகை மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சுய தொழில் நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பயனாளிகளுக்கு சுயதொழில் கூடுதல் கடன்களை விரைந்து வழங்க தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சிவக்குமார், சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story