சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் ஆய்வு
பொள்ளாச்சி அருகே சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி பகுதிகளில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் நடந்து வரும் 4.40 கிலோ மீட்டர் நீளமுள்ள தாளக்கரை சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் பொள்ளாச்சி-மீன்கரை சாலையில் 1.40 கிலோ மீட்டர் சாலை ஓடுதள மேம்பாட்டு பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் ஆய்வு செய்தார். தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடந்து வரும் பொள்ளாச்சி-பாலக்காடு சாலை விரிவாக்க பணிகளின் தரமும் ஆய்வு செய்யப்பட்டது. முன்னதாக பொள்ளாச்சி-நடுப்புணி சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், கோட்ட பொறியாளர்கள் சரவண செல்வம், தங்கராஜ், ரமேஷ், ஜெயலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.