பேரூராட்சிகள் இயக்குனர் திடீர் ஆய்வு

பேரூராட்சிகள் இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் 2021-22-ம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.242.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தை மேம்பாட்டு திட்ட பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து ரூ.119.80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் திடல் ஊருணி மேம்பாட்டு திட்டத்தையும் பார்வையிட்டார்.
பின்னர் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாகங்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை பணிகளையும் மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பதையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மண்டல உதவி இயக்குனர் ராஜா முதுகுளத்து பேரூராட்சித் தலைவர் ஷாஜகான் செயல் அலுவலர் மாலதி பேரூராட்சி மேற்பார்வையாளர் சரவணன், ராஜேஷ், முனியசாமி, குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.






