பாதாள சாக்கடை திட்டப்பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு
திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டிவனம்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற பகுதிகளில் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தில் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் இணைத்திட வேண்டும். மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன முறையில் மேற்கொள்ள வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது வேலூர் தலைமை பொறியாளர் செங்குட்டுவன், கடலூர் மேற்பார்வை பொறியாளர் பழனிவேலு, திண்டிவனம் மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன், விழுப்புரம் நிர்வாக பொறியாளர் அன்பழகன், உதவி நிர்வாக பொறியாளர்கள் மாரியப்பன், நாகேஸ்வரி, திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.