பொள்ளாச்சியில் மாறுவேட போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் அசத்தல்
பொள்ளாச்சியில் மாறுவேட போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் அசத்தல்
பொள்ளாச்சி
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் பொள்ளாச்சி வடக்கு வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களை உள்ளடக்கிய கல்வி கலை மற்றும் பண்பாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர் (பொறுப்பு) ஸ்வப்பனா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் கலைநிகழ்ச்சிகளாக வரவேற்பு நடனம், பலகுரலில் பேசுதல், மாணவர்கள் மாறுவேடம் அணிந்து தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். ஆசிரியர்களின் குழு பாடல், நடனம் ஆகியவையும் இடம்பெற்றன. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்களான ரஞ்சித்குமார், சுகன்யா, மதியரசி, திருமதி சுகந்தி, சிறப்பாசிரியர்கள் சக்திவேல், ரூபிஜெபா, லதா, ஜெபமாலை இயன்முறை மருத்துவர் அனிதா, பத்மாவதி, காளியம்மாள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.