மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு பொது நூலகத்துறை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
தமிழ்நாடு பொது நூலகத்துறை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. மாநில செயல் தலைவர் பச்சமுத்து தலைமை தாங்கினார். மாநில தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஸ்டாலின் வரவேற்றார்.
கூட்டத்தில் அனைத்து நூலகங்களிலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பதவி உயர்வின்போது மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நூலகங்களை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story