பஸ், ரெயில் பயண சலுகைகளை மாற்றுத்திறனாளிகள் பெறலாம்


பஸ், ரெயில் பயண சலுகைகளை மாற்றுத்திறனாளிகள் பெறலாம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தாலுகா மருத்துவமனைகள் மூலமாக பஸ், ரெயில் பயண சலுகைகளை மாற்றுத்திறனாளிகள் பெறலாம் என்று கலெக்டர் தொிவித்தாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகள், பஸ் பயண சலுகை (துணையாளர் படிவம்) மற்றும் ரெயில் பயண சலுகை கேட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை சென்று மிகவும் சிரமமடைவதை கருத்தில் கொண்டும், மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதியும் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குட்பட்ட தாலுகா மருத்துவமனைகளிலேயே பஸ் பயண சலுகை மற்றும் ரெயில் பயண சலுகைக்கான விண்ணப்பப் படிவம் உரிய மருத்துவர்களால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் அவரவர், தாலுகா மருத்துவமனைகளில் பஸ் பயண சலுகை, ரெயில் பயண சலுகை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story