மாற்றுத்திறனாளி மாணவி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி


மாற்றுத்திறனாளி மாணவி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி
x

2 கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றார்

மயிலாடுதுறை

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை உதவியுடன் 2 கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவியான லட்சுமியும் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டநிலையில் அவர் 600-க்கு 277 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். பிறக்கும்போதே லட்சுமிக்கு 2 கைகளும் இல்லாத காரணத்தால் பெற்றோர் இவரை பராமரிக்க முடியாமல் மயிலாடுதுறையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். 2 வயது குழந்தை முதல் அங்கு வளர்ந்து வந்த அவர் படிப்படியாக முன்னேறி பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகிகள், சக மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.






Next Story