பேரிடர் கால விழிப்புணர்வு பயிற்சி


பேரிடர் கால விழிப்புணர்வு பயிற்சி
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேரிடர் கால விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது

சிவகங்கை

சிங்கம்புணரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டன. பிரான்மலையில் உள்ள வள்ளல் பாரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆதவன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் முன்னிலையில் சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் 5 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விழிப்புணர்வு பயிற்சி வழங்கினர்.

மீட்பு உபகரணங்களை கொண்டு பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என செயல்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பேரிடர் காலத்தில் ஏற்படும் விபரீதங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது பருவ மழை காலங்களில் மாடியில் உள்ளவர்களை எவ்வாறு மீட்பது போன்றவற்றை செய்து காண்பித்தனர்.


Next Story