பேரிடர் கால மாதிரி எச்சரிக்கை சோதனை
செல்போன்களில் பேரிடர் கால மாதிரி எச்சரிக்கை சோதனை செய்யப்படுவதாக கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர்கால எச்சரிக்கை செய்தி இன்று (வெள்ளிக்கிழமை) செல்போன்களுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த எச்சரிக்கை செய்தி தொடர்பாக பொதுமக்கள் அச்சப்படவோ, எதிர்வினை ஆற்றவோ வேண்டாம். பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கை அனுப்பவும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த தகவலை கலெக்டர்கள் பாஸ்கரபாண்டியன், வளர்மதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story