ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
கோயம்புத்தூர்
ஆனைமலை
ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் பேரிடர் காலத்தில் ஆனைமலை தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழை மற்றும் எதிர்பாராத பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது. தீ விபத்துகள் நடக்கும்போது தீயை அணைக்கும் முறைகள், பேரிடர் காலங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முறை, முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தனர். இதில், தாசில்தார் பானுமதி, துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், சீனிவாசன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story