முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை


முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை
x
தினத்தந்தி 13 Oct 2023 11:45 PM GMT (Updated: 13 Oct 2023 11:45 PM GMT)

போடி தீயணைப்பு துறை சார்பில் உப்புக்கோட்டை-உப்பார்பட்டி இடையே செல்லும் முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நேற்று நடைபெற்றது.

தேனி

போடி தீயணைப்பு துறை சார்பில் உப்புக்கோட்டை-உப்பார்பட்டி இடையே செல்லும் முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதில் ஆறுகளில் வெள்ளம், பேரிடர் காலங்களில் எவ்வாறு மக்களை காப்பது, நீச்சல் தெரியாதவர்களை எப்படி காப்பாற்றுவது, என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

அப்போது வாழைமரம், லைப் ஜாக்கெட், டியூப், காலி பாட்டில்கள், காலி குடம், காலி சிலிண்டர், பிளாஸ்டிக் பந்து போன்றவற்றை பயன்படுத்தி திடீரென ஏற்படும் வெள்ள பெருக்கில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்று மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குளம், கண்மாய்களில் மழைநீரை சேமித்து வைப்பது குறித்தும் பேசினர்.


Next Story