தாழக்குடியில் காவல்துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி; போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்

தாழக்குடியில் காவல்துறை சார்பில் நடந்த பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்.
ஆரல்வாய்மொழி,
தாழக்குடியில் காவல்துறை சார்பில் நடந்த பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்.
பேரிடர் மீட்பு ஒத்திகை
தாழக்குடியில் உள்ள வீரகேரளப்பஏரி பெரியகுளத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட காவல்துறை மற்றும் ஊர்காவல்படையினர் சார்பில் நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ஊர்காவல்படை அதிகாரிகள் பிரகாஷ்குமார், மைதிலி சுந்தரம், பிளாபின் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
அதன்படி குளத்தில் மூழ்கி உயிருக்காக போராடும் நிலையில் உள்ளவரை காப்பாற்றுவது எப்படி? பிறகு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்புவது குறித்து போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் தத்ரூபமாக செய்து காட்டினர்.
இந்த நிகழ்ச்சியை நெய்யூர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா, தாழக்குடி பேரூராட்சி தலைவர் சிவகுமார், கவுன்சிலர்கள் ரோகிணி அய்யப்பன், இரவிப்பிள்ளை, ராஜ்குமார், அழகம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






