பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி
கடையநல்லூரில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் உள்ள தாமரைகுளத்தில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனி துணை கலெக்டர் குணசேகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் அரவிந்த், மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி, வட்டார போக்குவரத்து சூப்பிரண்டு ஜீவானந்தம், பொதுப்பணித்துறை அலுவலர் சரவணகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன், கடையநல்லூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் நஸ்ரின், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், யூனியன் ஆணையாளர் கந்தசாமி, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ரெட் கிராஸ் மனோகரன், தவ்ஹீத் ஜமாத் நல்லூர் சுலைமான், கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் சங்கரேஸ்வரி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராமச்சந்திரன், நாராயணன், சங்கரநாராயணன், மாடசாமி, சாந்தி, கிராம நிர்வாக உதவியாளர்கள் பாலின்ரமேஷ், ஆரோக்கியராஜ், மாரியம்மாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், டி.என்.டி.ஜே.சேவை அமைப்பு ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், ரெட் கிராஸ் குழுவினர், லயன்ஸ் மகாத்மா காந்தி, செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, வீராசாமி செட்டியார் என்.எஸ்.எஸ். மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.