அனுமதி இல்லாத இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை - மாநகராட்சி எச்சரிக்கை


அனுமதி இல்லாத இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை - மாநகராட்சி எச்சரிக்கை
x

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை

சென்னை திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாய், சாத்தாங்காடு, மணலியில் காமராஜ் சாலை, மாதவரத்தில் சி.எம்.டி.ஏ. டிரக் முனையம், தண்டையார்பேட்டையில் வடக்கு அவென்யூ சாலை, வியாசர்பாடி, மகாகவி பாரதியார் நகர், ராயபுரத்தில் கால்நடை டிப்போ, சூளை, அவதான பாப்பையா சாலை, திரு.வி.க.நகரில் ஜமாலியா பழைய லாரி நிலையம், பெரம்பூர் நெடுஞ்சாலை, அம்பத்தூரில் மாணிக்கம் பிள்ளை தெரு, அண்ணாநகரில் செனாய் நகர், முதல் பிரதான சாலை, தேனாம்பேட்டையில் லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கத்தில் குருசிவா தெரு எஸ்.எம்.பிளாக், ஜாபர்கான்பேட்டை, வளசரவாக்கத்தில் நடராஜன் சாலை சந்திப்பு, பாரதி சாலை, ஆலந்தூரில் கிருஷ்ணா நகர் பிரதான சாலை, ஒத்தவாடை, மயானபூமி அருகில், அடையாறில் வேளச்சேரி மயானபூமி, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில், பெருங்குடியில் 200 அடி ரேடியல் சாலை, குப்பை கொட்டும் வளாகம், சோழிங்கநல்லூரில் கங்கை அம்மன் கோவில் தெரு, காரப்பாக்கம் உள்ளிட்ட 15 இடங்களில் மட்டுமே கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி பொது இடங்களில் 1 டன் அளவுக்கு குறைவான கட்டிடகழிவுகளை கொட்டுபவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story