சூனாம்பேடு ஊராட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்


சூனாம்பேடு ஊராட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
x

சூனாம்பேடு ஊராட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.

செங்கல்பட்டு

வீடு ஒதுக்கீடு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சூனாம்பேடு ஊராட்சியில் 2017-18-ம் ஆண்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) திட்டத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த துரை, என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய வீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த துரை ஆறுமுகம் என்பவருக்கு ஒதுக்கீடு செய்து 4 தவணை தொகைகள் வழங்கி முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை

இதையடுத்து முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டெல்லாபாய், பத்மா ஜானகி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார், ரமேஷ், உதவி பொறியாளர் செந்தில் நாதன், ஒன்றிய பணிமேற்பார்வையாளர் இளங்கோ ஆகியோர் மீது சூனாம்பேடு போலீசில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும், துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story