மேட்டூர் நகராட்சிக்கு வரி செலுத்தாததால் ரெயில்வே, மின்சார வாரிய குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


மேட்டூர் நகராட்சிக்கு வரி செலுத்தாததால் ரெயில்வே, மின்சார வாரிய குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை நிலுவையில் வைத்திருந்ததால் மேட்டூர் ரெயில்வே குடியிருப்பு, மேட்டூர் மின்சார வாரிய மின் பணிமனை மற்றும் மேட்டூர் அனல் மின்நிலைய நிலை-2-க்கு சொந்தமான குடியிருப்பு ஆகியவற்றின் குடிநீர் இணைப்புகளை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்

மேட்டூர்:

வரிவசூல் பணி

மேட்டூர் நகராட்சி நிர்வாகம், சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை வசூலிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிைலயில், மேட்டூரில் உள்ள ரெயில்வே துறைக்கு சொந்தமான குடியிருப்பு மற்றும் ரெயில் நிலையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் சேவை வரியை நீண்ட நாட்களாக செலுத்த வில்லை என கூறப்படுகிறது.

இதேபோன்று மேட்டூர் மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்பணிமனை நிர்வாகத்தினர் மற்றும் மேட்டூர் அனல்மின் நிலைய நிலை-2 நிர்வாகத்துக்கு சொந்தமான குடியிருப்புகளுக்கு உரிய சொத்து வரியையும் நீண்ட நாட்களாக நகராட்சி நிர்வாகத்துக்கு செலுத்தவில்ைல என தெரிகிறது.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, வரிகள் நிலுவையில் உள்ள மேட்டூர் ரெயில்வே குடியிருப்பு, மேட்டூர் மின்சார வாரிய மின் பணிமனை மற்றும் மேட்டூர் அனல் மின்நிலைய நிலை-2-க்கு சொந்தமான குடியிருப்பு ஆகியவற்றின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் நேற்று இந்த குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.


Next Story