விஜயகரிசல்குளம் அகழாய்வில் மண்பானை கண்டெடுப்பு


விஜயகரிசல்குளம் அகழாய்வில் மண்பானை கண்டெடுப்பு
x

விஜயகரிசல்குளம் அகழாய்வில் மண்பானை கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் திரவம் வடிந்த நிலையில் சுடு மண்ணால் செய்யப்பட்ட மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறியதாவது:- பண்டைய காலத்தில் இப்பகுதியில் தொழிற்சாலை இயங்கி இருக்கலாம். தொழிற்சாலைக்கு தேவையான திரவம் சூடு பண்ணுவதற்கும், கொதிநிலையில் வைப்பதற்காகவும் இதனை பயன்படுத்தி இருக்கலாம். அதற்கான அறிகுறி இப்பானையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் தோண்டப்பட்ட குழிகளின் அளவு மற்றும் கிடைத்த எலும்புகளின் அளவீடு செய்யும் பணி, ஆவணப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



Next Story