பெருமாள் சிலை கண்டெடுப்பு


பெருமாள் சிலை கண்டெடுப்பு
x

ஏர்வாடி அருகே பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் மேலூரில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண் பணியாளர்கள் அங்குள்ள ஊருணியை தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் பழமையான பெருமாள் சிலையை கண்டெடுத்தனர் அதன் உயரம் சுமார் 4 அடியாகும். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நாங்குநேரி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் பெருமாள் சிலை பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு நாங்குநேரி தாசில்தார் முன்னிலையில் அங்குள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.


Next Story