அகழாய்வில் மண்பானை கண்டெடுப்பு


அகழாய்வில் மண்பானை கண்டெடுப்பு
x

சிவகாசி அருகே அகழாய்வில் மண்பானை கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் 11 குழிகள் தோண்டப்பட்டு தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட எடை கற்கள், நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்திய தக்களி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் உள்பட 2,300 பொருட்கள் கிடைத்தன. இந்தநிலையில் மண்பானை கண்டெடுக்கப்பட்டது. இந்த மண்பானை தடிமனாக இருந்தது. இதனை பார்க்கும்போது பண்டைய காலத்தில் கம்பு, தினை, கேப்பை, சோளம் உள்ளிட்ட தானியங்கள் கெடாமல் இருக்க மண்பானையில் பத்திரமாக வைத்திருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.



Next Story