குளத்தில் சாமி சிலை கண்டெடுப்பு
வத்திராயிருப்பு அருகே குளத்தை தூர்வாரிய போது சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே குளத்தை தூர்வாரிய போது சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
சிலை கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான மாவூத்தில் உதயகிரிநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகே பெரிய குளம் உள்ளது. இ்ந்த குளம் தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் குளத்தை தூர்வாரி கொண்டு இருந்தனர். அப்போது 3½ அடி உயரம் உள்ள பெருமாள் சாமி சிலை கண்ெடடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அருங்காட்சியகம்
வத்திராயிருப்பு தாசில்தார் உமாமகேஸ்வரியும் சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் அவரிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து தாசில்தார் உமா மகேஸ்வரி கூறியதாவது:- மாவூத்து கோவில் அருகே உள்ள குளத்தில் தூர்வாரும் போது கண்டெடுக்கப்பட்ட சிலை சேதமடைந்து காணப்படுகிறது. ஆய்விற்கு பின்னர் தான் இந்த சிலையின் தன்மை குறித்து முழுமையான தகவல் தெரியவரும். இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு அனுப்பும் வரை விருதுநகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த சிலை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த குளத்தை தூர்வாரும் போது முழு கண்காணிப்பு தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் இந்த குளத்தை தூர்வாரும் போது வெண்கல சிலை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.