ஆற்றுப்படுகையில் பதுக்கிய மணல் குவியல் கண்டுபிடிப்பு

ஆற்றுப்படுகையில் பதுக்கிய மணல் குவியல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றுப்படுகையில் பதுக்கிய மணல் குவியலை வருவாய் அதிகாரிகள் கண்டுபிடித்து அழித்து சமன் செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆற்றுப்படுகையில் பதுக்கிய மணல் குவியலை வருவாய் அதிகாரிகள் கண்டுபிடித்து அழித்து சமன் செய்தனர்.

ஆரணியை அடுத்த தச்சூர் ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் கிராம ஆற்றுப்படுகை அருகாமையில் மணலை கள்ளத்தனமாக விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பதாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில் வருவாய் ஆய்வாளர் நித்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் பொக்லைன் எந்திரம் வைத்து மணல் குவியல்களை பொக்லைன் எந்திரம் வைத்து கலைக்க செய்தனர். மேலும் ஆற்று படுகை பகுதிகளில் வாகனங்கள் செல்லாதவாறு ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டது.

1 More update

Next Story