போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு


போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு
x

போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு

திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த போலீசார் அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

வாகன சோதனை

நாகப்பட்டினம் அருகே போலீசார் நேற்றுமுன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக முத்துப்பேட்டைக்கு மீன்கள் ஏற்றும் சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்து. இதைத்தொடர்ந்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, மீன்வண்டியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த காரைக்கால் நிரவி டி.ஆர். பட்டினம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த அரவிந்தன், தமிழரசன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருநள்ளாறை அடுத்த அத்திப்படுகை மேலத்தெரு பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் சசிக்குமார் (வயது44) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலி மதுபான ஆலை

இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மதுபானங்கள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு கொண்டு செல்ல எடுத்து சென்றதாகவும், அங்கு போலி மதுபான ஆலை செயல்படுவதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர் மற்றும் போலீசார் முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாமிதுரை மகன் வீரசேகரன் என்பவருக்கு சொந்தமான பண்ணை தோப்பில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பறிமுதல்

அப்போது அங்கு போலி மதுபான ஆலை செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 1,500 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம், 4 பெரிய பேரலில் 500 லிட்டர் ஸ்பிரிட், 5 கேனில் கலர் திரவம், 75 மூட்டைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பாட்டில்கள், 50 காலி கேன்கள், 2ஆயிரம் அட்டை பெட்டி, 10 மூட்டையில் பாட்டில் மூடிகள், பாட்டில் மூடியை பெருத்தும்4 எந்திரங்கள் ஒரு மூட்டை ஸ்டிக்கர் மற்றும் போலி மதுபானம் தயாரிக்க தேவையான மூல பொருட்கள், அரசு முத்திரை லேபில், போன்ற பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உரிமையாளருக்கு வலைவீச்சு

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மதுபான ஆலை நடத்திய உரிமையாளர் வீரசேகரனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story