ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்


குடியாத்தத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

வேலூர்

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் அண்ணாதெரு, ஜி.பி.எம்.தேரு, கொசஅண்ணாமலை தெரு, தாடிஅருணாசல தெரு உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கூரை சீட்டுகள், கால்வாய் மீது கட்டப்பட்ட இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இந்தநிலையில் குடியாத்தம் நகர அ.தி.மு.க. செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஆர்.மூர்த்தி, நகர்மன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆர்.கே.அன்பு, நகரமன்ற உறுப்பினர்கள் தண்டபாணி, சிட்டிபாபு, லாவண்யாகுமரன், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான பி.மேகநாதன் உள்ளிட்டோர் நேற்று நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசை சந்தித்து ஒரு குறிப்பிட்ட வார்டுகளில் மட்டும் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும், அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டினால் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story